தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது தி.மு.க.அரசு -L முருகன் பேட்டி

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

டில்லியில் நிருபர்கள் சந்திப்பில், எல்.முருகன் கூறியதாவது: தமிழகத்தில் தீண்டாமை இருக்கிறது. 22 ஊராட்சிகளில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களால் அவர்களின் பணியை செய்ய முடியவில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தி.மு.க., அரசு தவறிவிட்டது.

40 சதவீதம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களில் 40 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர். ஹாத்ரஸ் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் ஆறுதல் தெரிவித்தார். ஆனால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஏன் நேரில் சந்திக்கவில்லை.

வன்முறை

தமிழகத்தில் தலித் சமூகத்தினருக்கு எதிரான வன்முறையை தடுக்க கோரி, தேசிய பட்டியலின ஆணைய தலைவரை தமிழக பா.ஜ., துணை தலைவர் தலையிலான பிரதிநிதிகள் குழு சந்திக்க உள்ளது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ப.ம.க வுக்கே உண்மையான வெற்றி -ராம ...

ப.ம.க வுக்கே உண்மையான வெற்றி -ராமதாஸ்  'முடிவு எப்படி இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த ...

பட்டியலின மக்களுக்கு அடிப்படை ...

பட்டியலின மக்களுக்கு அடிப்படை வாழ்வுரிமை கிடைக்குமா? என முதல்வருக்கு L. முருகன் கேள்வி பட்டியலின மக்களுக்கு அடிப்படை வாழ்வுரிமை கிடைக்குமா? '' என ...

கடந்த 10 ஆண்டுகளில் உதம்பூர் கது ...

கடந்த 10 ஆண்டுகளில் உதம்பூர் கதுவா -தோடா பகுதி பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர்,நில ஆக்கிரமிப்பாளர்கள்  போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியரை ஒடுக்குவதில் ...

துடிப்பான கிராமங்கள் திட்டத்த ...

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமித் ஷா ஆய்வு புதுதில்லியில் இன்று (13.07.2024) நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில், "துடிப்பான ...

மும்பையில் ரூ29,400 கோடி மதிப்பில் ...

மும்பையில் ரூ29,400 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ.29,400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ...

தீனதயாள் அந்தியோதயா திட்டத்தி ...

தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் கீழ் 90.76 சுய உதவிக்குழுக்களாக ஒருகிணைத்துள்ளது கடைக்கோடி மக்களுக்கும் உள்ளடக்கிய வாழ்வாதாரத்தை வழங்கும் அரசின் உறுதிப்பாட்டை ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...