பொம்மைத் தொழிலில் இந்தியக் கைவினைக்கலைஞர்களை ஆதரிக்க வேண்டுமெனவும், பொம்மைகள் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் மத்திய வர்த்தகம், தொழில் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா கூறியுள்ளார்.
2024 ஜூலை 8, அன்று புதுதில்லியில் தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, இன்வெஸ்ட் இந்தியா அமைப்பு, இந்திய பொம்மை சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய ‘பொம்மை தொழில் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், பொம்மை தயாரிப்பில் இந்தியா சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றார். இந்திய பொம்மை தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டுமென்று கூறிய அவர், பொம்மைகள் மூலம் குழந்தைகள் கற்பனைத்திறனையும், படைப்பாற்றலையும் வளர்க்க முடியும் என்று தெரிவித்தார்.
தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையின் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் உரையாற்றுகையில், அரசின் முன்முயற்சிகள் காரணமாக, இந்திய பொம்மைத்தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பொம்மை உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், சில்லறை விற்பனையாளர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |