2-வது சுகாதார உச்சி மாநாட்டில் ஜிதேந்திர சிங் உரை

புதுதில்லி ஹோட்டல் தாஜ் நகரில் நடைபெற்ற அமெரிக்க இந்திய வர்த்தக சபையின் (ஏஎம்சிஏஎம்) இரண்டாவது சுகாதார உச்சி மாநாட்டில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர்  ஜிதேந்திர சிங் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் அனைவருக்கும் குறைந்த செலவில் சுகாதார பராமரிப்பு சேவைகள் கிடைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“புதுமையான, எளிதில் அணுகக்கூடிய சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் கிடைப்பதை விரைவுபடுத்துதல்: தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றம்” என்ற இந்த உச்சிமாநாட்டின் மையக்கருத்தை அமைச்சர் பாராட்டினார். இந்தியாவில் அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

சுகாதார சேவைகளில் அமெரிக்க-இந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க சுகாதார வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள்,  தொழில்துறைப் பிரதிநிதிகள் ஆகியோரின் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்த வகையான உச்சிமாநாடுகள் முக்கிய வழிகாட்டியாக இருக்கும் என்றும் திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

தொற்று நோய்கள் ஒழிப்பு, தொற்றா நோய்களைக் குறைத்தல், சுகாதார குறியீடுகளை உருவாக்குதல், நிலையான முன்னேற்றம் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய பார்வையுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தான்  அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் சுகாதாரத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.  செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்றவற்றால் சுகாதார சேவைகளில் நமது திறன்களை கணிசமாக மேம்படுத்த முடியும் அவர் குறிப்பிட்டார்.

பொது சுகாதாரம் என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல எனவும் தனியார் பங்களிப்பு இதில் சமமாக முக்கியமானது என்றும் அமைச்சர்  ஜிதேந்திர சிங் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...