அமெரிக்காவில் இந்தியாவை அவதூறாக பேசியதற்காக ராகுலின் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய ப.ஜ.க கடிதம்

‘அமெரிக்காவில் இந்தியாவை அவதூறாகப் பேசியதற்காக, ராகுலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி பா.ஜ., சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த ராகுல், பல்கலை மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம், சீக்கியர்களின் நிலை மற்றும் இடஒதுக்கீடு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுல் முன் வைத்தார். இதற்கு பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கண்டனம் தெரிவித்தன. சீனாவை ஊக்குவிக்கிறது. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவதூறாக பேசியவதா? என பா.ஜ., குற்றம் சாட்டியது.

தற்போது, லோக்சபா சபாநாயகருக்கு பா.ஜ., எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராகுல் தனது பதவியை தவறாகப் பயன்படுத்துகிறார். அவர் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகன் என்ற முறையில் ராகுல் வெளிநாட்டு மண்ணில், இந்தியாவை அவதூறாக பேசுவது எந்த வகையிலும் சரியானது அல்ல. இது போன்ற கருத்துக்களை ராகுல் கூறுவதால், நாட்டின் சர்வதேச உறவுகளைப் பாதிக்கக்கூடும்.

இது தேச விரோதச் செயல். நாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதை, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது. ராகுலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...