இந்திய ரயில்வேயில் வரலாற்று மாற்றம் – பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடு முழுவதும் ரயில் இணைப்பை மேம்படுத்தும் வகையில், பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு இன்று (ஜன.,06) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர், தெலுங்கானாவில் சர்லபள்ளி புதிய டெர்மினல் ஸ்டேஷனை திறந்து வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா முழுவதும் ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் பயன்பாட்டில் உள்ளது. நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. நேற்று டில்லி மெட்ரோவின் முக்கிய திட்டங்களை துவக்கி வைத்தேன். இன்று கோடிக்கணக்கான மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், பயணிகளுக்கு நவீன வசதிகள், நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் ரயில் சேவை ஆகியவற்றை நாங்கள் செய்து வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ரயில் சேவைகள் அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டு வரை, நாட்டில் 35 சதவீத ரயில் பாதைகள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டன. இன்று, இந்தியா தனது ரயில் பாதைகளில் 100 சதவீத மின்மயமாக்கலை நெருங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், 30,000 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய ரயில் பாதைகளும், சாலை இணைப்பை மேம்படுத்த ஆயிரக்கணக்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்டுள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுகிறது. இது நாட்டின் நன்மதிப்பை மேம்படுத்த வழிவகுத்தது. மக்கள் குறைந்த நேரத்தில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புகிறார்கள், எனவே நாடு முழுவதும் அதிவேக ரயில்களுக்கு பெரும் தேவை இருப்பதைக் கண்டோம். இன்று 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் மக்களின் பயண நேரத்தை குறைத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...