டில்லியை குப்பை கிடங்காக கெஜிரிவால் மாற்றிவிட்டார் – அமித்ஷா

டில்லியை குப்பை கிடங்காக கெஜ்ரிவால் மாற்றிவிட்டார். யமுனை நதியை மாசுபடுத்தி விட்டார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: ஆம் ஆத்மி அரசு தவறான நிர்வாகத்தை நடத்தி வருகிறது. தலைநகரின் மோசமான நிலைக்கு கெஜ்ரிவால் நிர்வாகமே காரணம். டில்லியை குப்பை கிடங்காக கெஜ்ரிவால் மாற்றிவிட்டார். யமுனையை மாசுபடுத்தி விட்டார். நகரின் உள்கட்டமைப்பு சிதைந்து வருகிறது.

டில்லியில் சரியான கழிவுநீர் வசதிகள் இல்லாததால் மழைக்காலத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த சில ஆண்டுகளில், டில்லியில் மழையால் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இது வேறு எங்கும் நடக்கவில்லை, ஆனால் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பை ஏற்காமல் சாக்குப்போக்குகளை தொடர்ந்து கூறுகிறது. ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் தனது தோல்விகளை மறைக்க அற்ப அரசியலை கெஜ்ரிவால் செய்து வருகிறார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக யமுனையில் விஷம் கலந்திருப்பதாக கெஜ்ரிவால் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். டில்லி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதில் ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. யமுனை நதி முன்னெப்போதையும் விட மாசுபட்டுள்ளது. மேலும் மக்கள் அசுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மக்கள் தன்னை நிராகரிப்பார்கள் என்று கெஜ்ரிவால் சாக்குப்போக்கு கூறுகிறார். டில்லி வாக்காளர்கள் பிப்ரவரி 5ம் தேதி ஆம் ஆத்மி கட்சியை அகற்றி பா.ஜ.,வை ஆட்சிக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளது. பா.ஜ., வெற்றி பெற்றால் மாற்றம் ஏற்படும். டில்லியை உலகின் முதல் தலைநகராக மாற்றுவோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...