டில்லியில் அத்தியாவசிய பொருட்கள் இல்லை என்பதை வெளிநாட்டில் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன் – ஜெய்சங்கர்

டில்லியில் அத்தியாவசிய பொருட்கள் இல்லை என்பதை வெளிநாட்டில் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன் என டில்லி ஆம்ஆத்மி அரசை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் அவர் பேசியதாவது: ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த டில்லி மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். ஆம் ஆத்மி ஆட்சியில் 10 ஆண்டுகளாக நகரம் பின்தங்கி உள்ளது. நாட்டின் சிறந்த வளர்ச்சிகளுக்கு டில்லி ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அடிப்படை வசதிகள் குறித்து அளித்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி நிறைவேற்றவில்லை.

தேசிய தலைநகரில் உள்ள மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் ஆம் ஆத்மி அரசு செய்யவில்லை. சுத்தமான தண்ணீர், மின்சாரம், சுகாதாரம், வீடுகள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை ஆம் ஆத்மி கட்சி வழங்கவில்லை. நகரம் பின்தங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. வரவிருக்கும் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு கட்டாயமாக மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.

நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம், உலகத்திடம் ஒரு விஷயத்தை மறைக்கிறேன். வெளிநாடுகளுக்குச் சென்று, தேசிய தலைநகரில் வசிக்கும் மக்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைக்கவில்லை, சிலிண்டர்கள் இல்லை, குழாய் தண்ணீர் கிடைக்கவில்லை என்று சொல்ல வெட்கப்படுகிறேன். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...