மஹாராஷ்டிரா உங்களை மன்னிக்காது – ராகுலை சாடிய பட்நாவிஸ்

மஹாராஷ்டிரா மக்கள் காங். எம்.பி., ராகுலை மன்னிக்க மாட்டார்கள் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்துள்ளார்.

லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசினார். அப்போது மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் புதியதாக 70 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது ஹிமாச்சலபிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை அளவு கொண்டது என்று கூறி இருந்தார்.

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களுக்காக இப்படி போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும அவர் குற்றம்சாட்டி இருந்தார். அவரது கருத்துக்கு பா.ஜ., தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந் நிலையில், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ராகுல் பேச்சை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு;

மஹாராஷ்டிராவை அவமதிப்பதற்கு பதிலாக உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர், மகாத்மா பூலே, வீர் சாவர்க்கர் ஆகியோரை அவமதித்து விட்டீர்கள்.

உங்கள் கட்சி தோற்றுவிட்டது என்பதற்காகவே மஹாராஷ்டிரா மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வழங்கிய தீர்ப்பை கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள்.

உங்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்காக அவதூறுகளில் ஈடுபடுகிறீர்கள். இதை மஹாராஷ்டிரா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இவ்வாறு பட்னவிஸ் கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...