மோசடி கணக்குகளை அடையாளம் காண ஏ.ஐ தொழில்நுட்பம் – அமித்ஷா

சைபர் குற்றங்களைத் தடுக்க, மோசடி கணக்குகளை அடையாளம் காண ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

இணையப் பாதுகாப்பு குறித்தும் இணைய மோசடி குறித்தும் ஆலோசிக்க, உள்துறை அமைச்சகத்திற்கான பார்லிமென்ட் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.

அமித் ஷா பேசியதாவது:

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசின் சைபர் குற்ற கண்காணிப்பு மற்றும் கண்டறிதல் பிரிவான இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4சி) பரிந்துரைகளின் அடிப்படையில் இதுவரை 143,000க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 805 செயலிகள் மற்றும் 3,266 வலைத்தள இணைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான தரவு புள்ளிகள் பகிரப்பட்டுள்ளன. 19 லட்சத்திற்கும் மேற்பட்ட மோசடி கணக்குகள் பிடிபட்டுள்ளன.

மேலும் ரூ.2,038 கோடி மதிப்புள்ள சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளன.

மின்னிலக்க முறையில் இடம்பெறும் மோசடிகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டு, அவற்றைத் தொடக்கத்திலேயே முடக்க செயற்கை நுண்ணறிவு உதவும்.

அவ்வகையில், ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையம் ‘மியூல்ஹன்டர் ஏஐ’ எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. அது மோசடிக் கணக்குகளை அடையாளம் காண வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் உதவும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...