அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்து பேசினார். மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, அங்கு பாரிசில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரானை சந்தித்து பேசினார்.

பிரான்ஸ் பயணத்தை முடித்து நேற்று ( பிப். 13-ம் தேதி) அங்கிருந்து புறப்பட்டு இந்திய நேரப்படி அதிகாலை வாஷிங்டன் சென்றடைந்தார். வாஷிங்டனின் பிளேர் ஹவுசில் தங்கியிருந்த மோடியை, உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தன் குடும்பத்துடன் சந்தித்தார். பின்னர் விவேக் ராமசாமி மோடியை சந்தித்து பேசினார்.

அவரை தொடர்ந்து அமெரிக்க தேசிய உளவுத்துறையின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ள ஹிந்து – அமெரிக்கரான துளசி கப்பார்டை பிரதமர் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் இன்று அதிகாலை சந்தித்து பேசினார்.

அப்போது, ‘என் சிறந்த நண்பனே’ என மோடியை, டிரம்ப் வரவேற்றார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, டிரம்ப்புக்கு, மோடி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: நான் இங்கு நுழைந்தபோது, ஆமதாபாத்தில் நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ மற்றும் ஹூஸ்டனில் நடந்த ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது. அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றதற்கு, 140 கோடி இந்திய மக்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். 3வது முறையாக பிரதமராக இந்திய மக்கள் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். இரு நாடுகளின் முன்னேற்றம், செழுமையை நோக்கி நாம் ஒன்றாக பயணம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

சந்திப்பின் போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, இருநாட்டு வர்த்தகக் கொள்கைகள், பரஸ்பர வரி விதிப்பு மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டின் மீது இந்தியாவுக்கு உள்ள கவலைகள், அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் இந்தியர்கள் விவகாரம், ராணுவத்துக்கான ஆயுதங்கள் கொள்முதல், வரி விதிப்பு, வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...