மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களினால் 10 ஆண்டுகளில் மக்கள் மருத்துவத்திற்கு செலவிடப்படும் தொகை குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த சர்வதேச சுகாதார மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் இந்தத் திட்டம், உலகளவில் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும். அண்மையில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேசிய சுகாதார திட்டப்பணிகள் மற்றும் மத்திய அரசு மேற்கொள்ளும் சுகாதார திட்டங்களினால், கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் மருத்துவத்திற்கு செலவிடப்படும் தொகை, 64.2 சதவீதத்தில் இருந்து 39.4 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |