” தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை. என்ன படிக்க வேண்டும் என்ற அடிப்பட உரிமை கூட மறுக்கப்படுகிறது,” என கவர்னர் ரவி கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் நடந்த அய்யா வைகுண்டர் நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை. என்ன படிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகிறது. மொழித் திணிப்பு என்ற பொய்யை இங்குள்ள ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விடுகின்றனர். அந்நிய சதிகள் வெற்றி பெற முடியாமல், தேசத்தின் மீது சேற்றை பூசுகின்றனர்.
மொழியை தேர்வு செய்வது அடிப்படை உரிமையை செய்ய விட வேண்டும். வெறுப்பையும், காழ்ப்புணர்ச்சியையும் விதைக்க நினைக்கின்றனர். அது ஒரு போதும் வெற்றி பெறாது. அய்யா வைகுண்டரின் சனாதன சிந்தனைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |