தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: தி.மு.க.,விற்கு, மேடை போட்டு பா.ஜ.,வை விமர்சனம் செய்வதே வேலையாகி விட்டது. மக்கள் பிரச்னைகளை பற்றிப் பேச அவர்களுக்கு நேரமில்லை.
விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதில் தமிழகத்திற்கு லோக்சபா தொகுதிகள் குறையும் என்கிறார், முதல்வர் ஸ்டாலின்.
அதுபோன்று தொகுதிகள் குறையாது என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் உறுதியளித்துவிட்டனர். பிரச்னையே எழாதபோது, அது குறித்து பேசுவதற்கு எதற்கு அனைத்துக்கட்சி கூட்டம்? அங்கு போய் பேச எதுவும் இல்லை என்பதால், பா.ஜ., புறக்கணிக்கிறது.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை, பாலியல் சம்பவங்களை கட்டுப்படுத்த அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தினால், முதல் ஆளாக பா.ஜ., பங்கேற்கும். மும்மொழி கற்பிக்கும் பள்ளியில், தாய்மொழியான தமிழில் தான் படித்தேன்.
ஆனால், முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு அதெல்லாம் தெரியாது; காரணம் அவர் படிக்காதவர்.
இலங்கையில், புதிய அரசு பதவியேற்ற பின், தமிழக மீனவர்களுக்கு சிக்கல் அதிகமாகி உள்ளது; பலர் கைது செய்யப்படுகின்றனர். மீனவர்கள் என்ற போர்வையில், சிலர் கடத்தல் தொழில் செய்கின்றனர்.
அவர்களை, நம் கடலோர காவல்படையினர் தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்கள் பிரச்னை குறித்து, தமிழக மீனவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும்.
இருநாட்டு அமைச்சர்கள், மீனவர்கள், அதிகாரிகள் இணைந்து விரைவில் கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டு மீனவர்கள் கைது பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |