காங்கிரசிடம் மக்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை – பிரதமர் மோடி

” மக்களின் விருப்பங்களை காங்கிரஸ் நசுக்கியது. இதனால், அக்கட்சியிடம் இருந்து எதிர்பார்ப்பதை மக்கள் நிறுத்திவிட்டனர்,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டில்லியில் ஆங்கில மீடியா நடத்திய கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது: எட்ட முடியாத எந்த இலக்குகளும் கிடையாது. இந்தியா பெரிதாக சிந்திக்கிறது. பெரிய லட்சியங்களை அடைகிறது. சிந்தனையில் பெரிய அளவில் மாற்றம் செய்ததால், இது சாத்தியமாகியுள்ளது.

ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர விரும்புகிறேன் என முன்பு கூறியிருந்தேன். குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வரும் முதல் தலைமுறையினராக அவர்கள் இருக்க வேண்டும்.

2014க்கு முன் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் எப்படி இருந்தன என்பது இளைஞர்களுக்கு தெரியாது. ரூ.10 -12 லட்சம் கோடி அளவுக்கு மோசடிகள் நடந்தன. 2029ல் இளைஞர்கள் ஓட்டளிக்க செல்லும் போது, ஒப்பிடுவதற்கு என அவர்களுக்கு எதுவும் இருக்காது.

இது பாரதத்தின் யுகம் என ஒட்டு மொத்த நாடும் சொல்கிறது. உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக வரும் நிலையில் பாரதம் இருக்கிறது.

இந்தியாவின் சாதனையும், வெற்றியும் உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கையையும் எதிர்பா்ப்பையும் அளித்து உள்ளது. முன்பு உலக நாடுகளுக்கு சுமையாக இருந்த இந்தியா, இன்று உலகத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறது.

நாட்டின் வேகம் மற்றும் சாதனைகளில் இருந்து இந்தியாவின் எதிர்கால திசையை புரிந்து கொள்ள முடியும். நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன போதும், உலகின் 11வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 5வது பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ளோம். அதே வேகத்தில் 3வது இடத்தை நோக்கி முன்னேறுகிறோம்.

18 ஆண்டுகளுக்கு முன்பு 2007ல் பாரத்தின் ஓராண்டு ஜிடிபி 1 லட்சம் கோடியை தாண்டியது. ஆனால், இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் இதனை தாண்டிவிட்டோம்.

மக்களுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு ஒரு ரூபாயிலும் 15 பைசா மட்டுமே ஏழை மக்களுக்கு செல்கிறது என முன்னாள் பிரதமர் கூறினார். மக்களின் விருப்பங்களை காங்கிரஸ் நசுக்கியது. அக்கட்சியிடம் இருந்து மக்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகளுக்கான பொம்மைகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், இன்று பொம்மைகள் ஏற்றுமதி மும்மடங்கு அதிகரித்து உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பில் மூலதன செலவு ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...