தாய்மார்கள் சகோதரிகளின் ஆசி பிரதமர் மோடி பெருமிதம்

‘தாய்மார்கள், சகோதரிகளின் ஆசீர்வாதங்கள் எனக்கு வந்து கொண்டே இருப்பதால், நான் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறேன்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

குஜராத் மாவட்டம் நவ்சாரியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு பெண்ணுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெண்களிடமிருந்து உத்வேகங்களைப் பெறுவது நமக்கு முக்கியம்.

எங்கள் அரசு பெண்களுக்காக பாடுபடுகிறது. ஆயிரக்கணக்கான கழிப்பறைகளைக் கட்டி பெண்களுக்கு கண்ணியத்தை அளித்தோம். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிப் பாதையில் இந்தியா பயணிக்கிறது. புதிய பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மசோதா பெண்களை வலுப்படுத்துவதாகும். இது சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கான எனது அர்ப்பணிப்பு. ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஜனாதிபதியாக இருக்கிறார்.

இன்று பெண்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டிய நாள். நான் உலகின் மிகப் பெரிய பணக்காரன் என்று பெருமையுடன் சொல்ல முடியும். எனக்கு கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆசீர்வாதங்கள் உள்ளன. இந்த ஆசீர்வாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதனால் தான் நான் உலகின் மிகப் பெரிய செல்வந்தராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...