மத்திய அரசு, 2020ல் புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது. அதை செயல்படுத்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், ‘பிஎம் ஸ்ரீ’ என்ற திட்டம் அறிமுகமானது.
அதாவது, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, நாட்டில் முதல் கட்டமாக, 14,500க்கும் அதிகமான பள்ளிகளை மத்திய அரசு தேர்வு செய்தது.
இவற்றை, மத்திய அரசு 18,128 கோடி ரூபாய்; மாநில அரசுகள் 9,232 கோடி ரூபாய் பங்களிப்புடன், முன்மாதிரி பள்ளிகளாக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு, ‘பிரைம் மினிஸ்டர்ஸ் ஸ்கூல்ஸ் பார் ரைசிங் இண்டியா’ என பெயரிடப்பட்டு, சுருக்கமாக, ‘பிஎம் ஸ்ரீ’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி, மாணவர்களின் பாதுகாப்பு, இயற்கையான சுற்றுச்சூழல், பரவலான கற்றல் அனுபவம், மாணவர்களின் உடல்நலன், கல்விக்கான நவீன வளங்கள், குழந்தைகளின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் சூழல், பல மொழிகளை கற்கும் வசதி போன்றவை மேம்படுத்தப்படும்.
இந்த திட்டத்தில் பயன் பெற பள்ளிகள் நேரடியாக, பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆண்டுக்கு நான்கு முறை பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, பட்டியல் வெளியிடப்படும். இந்த திட்டத்தில் இதுவரை, 12,084 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்தில் 1,710, ஆந்திராவில் 855, மஹாராஷ்டிராவில் 827, பீஹாரில் 804, மத்திய பிரதேசத்தில் 693 பள்ளிகள் தேர்வாகி உள்ளன.
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |