காஷ்மீரில் சட்டவிரோத ஆக்ரமிப்பு – பாகிஸ்தானை கடுமையாக சாடிய ஜெய்சங்கர்

‘காஷ்மீரில் மிக நீண்ட காலமாக சட்ட விரோதமாக மற்றொரு நாடு ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது’ என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

டில்லியில் நடந்த தனியார் மாநாட்டில், மத்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கர் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மற்றும் சில மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: நாம் அனைவரும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றி பேசுகிறோம்.

இந்தியாவைப் பொறுத்த வரையில், காஷ்மீரில் மிக நீண்ட காலமாக சட்ட விரோதமாக மற்றொரு நாடு ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. நாங்கள் ஐ.நா.,விற்கு சென்றோம். தாக்குதல் நடத்திய வரும், பாதிக்கப்பட்டவரும் சமமாக நிறுத்தப்பட்டனர். படையெடுப்பு சர்ச்சையாக மாற்றப்பட்டது.

குற்றவாளிகள் யார்? நமக்கு ஒரு ஒழுங்கு தேவை என்றால், நியாயம் இருக்க வேண்டும். உள்நாட்டின் ஒழுங்கின் போல, சர்வதேச ஒழுங்கும் தேவை. ஒழுங்கின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஐ.நா., நடுநிலையுடன் செயல்பட வேண்டும். இன்று நாம் அரசியல் தலையீடு பற்றிப் பேசுகிறோம். பாகிஸ்தான் போன்ற சிறிய நாடுகள் கூட ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...