ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது. இதனை வரவேற்பதாக உள்துறை அமைச்சர் அமித்-ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஹரியத்தின் இரண்டு அமைப்புகளான ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் பிரிவினைவாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது. பாரதஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதைபோன்று அனைத்து அமைப்புகளும் முன்வந்து பிரிவினைவாதத்தை முற்றிலுமாக கைவிடவேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், வளர்ந்த, அமைதியான மற்றும் ஒன்றுபட்டபாரதத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இது ஒருபெரிய வெற்றியாகும் என்றும் குறித்த பதிவில் அமித்-ஷா தெரிவித்துள்ளார்.
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |