பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத்

ராகுல் காந்தி ஒரு ‘சோதனை மாதிரி’ என்றும் பாஜகவின் பாதையை தெளிவுபடுத்துவதற்கு அவர் உதவுவதாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் பேசியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ (ஒற்றுமை நடைப்பயணம்) என்பது ‘பாரத் தோடோ யாத்திரை’. அதாவது இந்தியாவைப் பிரிக்கும் பிரசாரம்.

ராகுல் காந்தி, வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியாவை விமர்சிக்கிறார். இந்த நாட்டு மக்களுக்கு அவரின் நோக்கங்கள் என்னவென்று தெரியும்.

பாஜகவைப் பொருத்தவரை ராகுல் காந்தி போன்ற சில ‘சோதனை மாதிரிகள்’ இருப்பது, கட்சியின் தெளிவான பாதையை உறுதிசெய்ய உதவுகிறது. பாஜகவின் பாதையை தெளிவுபடுத்த ராகுல் காந்தி உதவுகிறார்.

அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் வேண்டுமென்றே சில பிரச்னைகளை பெரிதாக்குகிறது. அயோத்தி ராமர் கோயில், முத்தலாக் தடைச் சட்டம், நாட்டின் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் காங்கிரஸின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

காங்கிரஸ் ஏன் முத்தலாக்கை ஒழிக்கவில்லை? ஏன் கும்பமேளாவை ஊக்குவிக்கவில்லை? காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்க ஏன் தவறவிட்டது? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டிய யோகி, தேர்தல் முடிவைத் திசைதிருப்பும் முயற்சியில் சர்ச்சைக்குரிய அமெரிக்க ஹெட்ஜ் நிதி கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸிடமிருந்து காங்கிரஸ் நிதி பெற்றது தேசத்துரோகத்திற்கு ஒப்பானது என்று விமர்சித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...