வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் மன்னர் பிலிப் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பெல்ஜியம் நாட்டு மன்னர் பிலிப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இளவரசி ஆஸ்ட்ரிட் தலைமையிலான இந்தியாவுக்கான பெல்ஜியம் பொருளாதார உறவுகளை மோடி பாராட்டினார். வலுவான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பெல்ஜியம் மன்னர் பிலிப்புடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது வலுவான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடத்தல் வழக்கில் சிக்கி உள்ள மெஹூல் சோக்சியை நாடு கடத்த இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. இதனால் இந்த இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |