பொதுமக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட 22,000 கோடி ரூபாய் மீட்பு – பிரதமர் மோடி

பொது மக்களை கொள்ளையடித்தவர்கள், கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். இரவும் பகலும் விமர்சிக்கப்படும் அமலாக்கத்துறையானது, இதுவரை ரூ.22 ஆயிரம் கோடி பணத்தை கைப்பற்றி உள்ளது. இந்த பணமானது, திருடப்பட்டவர்களிடம் கொடுக்கப்பட உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று உலகில் அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த இளைஞர்களின் திறன் மேம்பட்டு வருவதுடன், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையின் தாரக மந்திரமாக நாடே முதன்மை என்பது உள்ளது.

ஒரு காலத்தில், அனைத்தும் நாடுகளுடனும் சம தூரத்தை பேணுவது என்ற கொள்கையை பின்பற்றி வந்தது. ஆனால், இன்று இந்தியாவின் கொள்கையானது, அனைவரையும் நெருக்கத்தில் கொண்டு வருவது என மாறி உள்ளது. சர்வதேச கொள்கை முடிவு எடுக்கும் அமைப்புகளில் , உலகின் தெற்கு பகுதியின் வலுவான குரல் உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது.

சர்வதேச யோகா தினம், பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையம் மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இது துவக்கம் தான். சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் செல்வாக்கு முன் எப்போதையும் விட அதிகரித்து காணப்படுகிறது.

இன்று உலக நாடுகள் இந்தியாவை உற்றுப் பார்க்கிறோம். எந்த நாட்டிற்கு சென்றாலும் இந்தியா குறித்து மக்கள் மகிழ்ச்சி உடன் பேசுகிறார்கள். 70 ஆண்டுகளில் உலகின் 11வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறிய இந்தியா, அடுத்த 7 – 8 ஆண்டுகளில் உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது எப்படி

சர்வதேச நிதியத்தின் புதிய தரவுகள் வந்து கொண்டு உள்ளன. இதில், 10 ஆண்டுகளில் ஜிடிபியை இரு மடங்காக்கிய உலகில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது எனக்கூறப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனதுபொருளாதாரத்தில் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை சேர்த்து உள்ளது. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர்.

எரிசக்தி வளம் உள்ளிட்ட உலகின் முக்கிய சவால்கள் குறித்த பிரச்னையை சரி செய்ய உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும். இதற்காக, சர்வதேச சோலார் ஒத்துழைப்பை நாம் ஏற்படுத்தி உள்ளோம். ஆக்கப்பூர்வமான எரிசக்தியில் சிறிய நாடுகளும் பலன் பெற முடியும் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையானது, பருவநிலை மாற்றத்தில் நேர்மறையான மாற்றத்தை உண்டாக்கி உள்ளதுடன், உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகளின் தேவையை பூர்த்தி செய்துள்ளது. இந்த முயற்சியில் 100க்கும் மேற்பட்டநாடுகள் பங்கு அளிக்கின்றன.

பொது மக்களிடம் இருந்து கொள்ளையடித்தவர்கள், திருடப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். இரவும் பகலும் விமர்சிக்கப்படும் அமலாக்கத்துறையானது, இதுவரை ரூ.22 ஆயிரம் கோடி பணத்தை கைப்பற்றி உள்ளது. இந்த பணமானது, திருடப்பட்டவர்களிடம் கொடுக்கப்பட உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...