சிறந்த பிரதமரை இந்தியா பெற்றுள்ளது ட்ரம்ப்

இந்தியா சிறந்த பிரதமரை பெற்றுள்ளது பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி, சிறந்த நண்பர் என்று பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

2017 முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப் பேற்றுள்ளார். அவர் அதிபராக பதவியேற்றதில் இருந்தே, உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம், வரிவிதிப்பு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடுகடத்தல் என ஒவ்வொரு விஷயத்திலும் அதிரடியாக செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில், இந்திய பொருட்களுக்கு அதிகவரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அடிபர் அண்மையின் எச்சரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க பொருட்களுக்கான வரியை இந்தியா குறைக்கா விட்டால் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையின் கீழ் இந்தியபொருட்களுக்கு அதிகளவு வரி விதிக்கப்படும் என அவர் கூறினார். ஏப்ரல் 2-ந் தேதி முதல் இந்திய பொருட்கள்மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதிக்கும் என அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் வெள்ளைமாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களிடம் டிரம்ப் பேசினார்.
அப்போது , இந்தியாவுடனான உறவுகுறித்தும், வரி தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு டொனால்ட் ட்ரம்ப் பதிலளிக்கையில், ‘வரிதொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நல்லமுறையில் நடந்தது. பிரதமர் மோடி சமீபத்தில் இங்குவந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளோம். உலகிலேயே அதிகவரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
பிரதமர் மோடிமிகவும் புத்திசாலி. என்னுடைய நல்லநண்பரும் கூட. நாங்கள் இது தொடர்பாக பேசினோம். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அனைத்தும் நல்லமுறையில் நடக்கும் என்று நினைக்கிறேன். சிறந்த பிரதமரை இந்தியா பெற்றுள்ளது.’ இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...