நக்சல் இல்லாத பாரதத்தை உருவாக்க செயலாற்றுவோம் – அமித்ஷா

”மத்திய அரசின் தொடர் முயற்சிகளால், நாட்டின் நக்சல் தீவிரவாத பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் எண்ணிக்கை, 12லிருந்து ஆறாக குறைந்துள்ளன,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி அரசு, நாட்டிலிருந்து நக்சல் தீவிரவாதத்தை வேருடன் அகற்ற முடிவு செய்து செயலாற்றி வருகிறது.

நக்சல்கள் இல்லாத பாரத நாட்டை உருவாக்க திட்டமிட்டு செயலாற்றுகிறோம். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, நாட்டின் நக்சல் பாதித்த மாவட்டங்களாக இருந்த, 12 மாவட்டங்கள் குறைந்து, ஆறாக மாறியுள்ளன. 2026 மார்ச் 31ம் தேதிக்குள், நாட்டில் இருந்து நக்சல் தீவிரவாதம் ஒழித்துக் கட்டப்படும். இதில், அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் என, அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில், வளர்ச்சி திட்டங்களுக்காக அந்த மாவட்டங்களுக்கு, 10 – 30 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...