வக்ப் வாரிய விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது – அமித்ஷா

‘வக்ப் வாரிய விவகாரத்தில் முஸ்லிம்களை பயப்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஓட்டு வங்கி அரசியல் செய்கின்றனர்’ என்று லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா, லோக்சபாவில் இன்று (ஏப்ரல் 02) மதியம், 12:00 மணிக்கு பார்லிமென்ட் விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஏற்காததால், சபையில் விறுவிறுப்பான விவாதம் நடந்து வருகிறது.

பின்னர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: வக்ப் சட்டத்திருத்தத்திற்கு 97 லட்சம் கோரிக்கைகள் பெறப்பட்டு உள்ளது. பார்லிமென்ட் வரலாற்றில் வேறு எந்த மசோதாவிற்கும் இவ்வளவு விரிவாக ஆலோசனை நடைபெற்றதில்லை, இவ்வாறு அவர் பேசினார்.

லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால் பேசியதாவது: இந்த வக்ப் மசோதாவில் தங்களது கருத்துகளை முன் வைக்க எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். நீங்க சட்டத்தையே தகர்க்கிறீர்கள். திருத்தம் செய்ய பல விதிகள் உள்ளன. இதற்கு கருத்து தெரிவிக்க நேரமே அளிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார். இதற்கிடையே, சர்ச்சைக்குரிய வகையில் மசோதா அம்சங்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

பா.ஜ., தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேச கட்சியும், இந்த மசோதாவில் இரு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

லோக்சபாவில் நடந்த காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் வக்ப் வாரிய மசோதா குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது; வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா, மத நடவடிக்கைகளில் தலையிடுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. வக்ப் வாரிய விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது. அந்த எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை. வக்ப் வாரிய நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள். வக்ப் வாரியங்களை மேற்பார்வையிடும் நிர்வாக பணியை மட்டும் அதிகாரிகள் செய்வார்கள். வக்ப் சொத்து நிர்வாகத்தில் குளறுபடி செய்வோரை கண்காணிக்கும் பணியை அதிகாரிகள் செய்வார்கள். இந்த விவகாரத்தில் முஸ்லிம்களை பயப்படுத்தி, ஓட்டு அரசியல் நடக்கிறது, இவ்வாறு கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...