பிரிட்டனுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமரை நேற்று சந்தித்து, தாராள வர்த்தக ஒப்பந்தம், பிரிட்டன் பல்கலைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சு நடத்தினார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு, அரசு முறை பயணமாக, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். தலைநகர் லண்டனில் நேற்று நடந்த, இந்தியா – பிரிட்டன் இடையேயான, 13வது பொருளாதார மற்றும் நிதி கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
இதில், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர், அந்நாட்டின் நிதி அமைச்சர் ரச்சல் ரீவ்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இந்தியா – பிரிட்டன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை துவங்குவது, பிரிட்டன் பல்கலைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமருடன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்து, இந்தியா – பிரிட்டன் இடையே இரு ஆண்டுகளுக்கும் மேல் பேச்சு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |