சிறுபான்மையினர் மீது அனுதாபம் இருந்தால், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரை கட்சியின் தலைவராக காங்கிரஸ் கட்சி அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 14) தெரிவித்தார்.
தேர்தலிலும் முஸ்லிம் சமூகத்தினருக்கு காங்கிரஸ் 50% வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், அதில் வெற்றி பெற்றால் அவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையான முன்வைக்கட்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஹரியாணா மாநிலம் ஹிசார் பகுதியில் மகாராஜா அக்ரசென் விமானநிலையத்தில் புதிய முனைய கட்டடத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 14) அடிக்கல் நாட்டினார். ஹிசார் – அயோத்தி இடையே பயணிகள் விமானத்தையும் தொடக்கி வைத்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே சிறுபான்மையினர் மீது அக்கறை இருந்தால், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கட்சியின் தலைமை பொறுப்பை வழங்க முடியுமா? காங்கிரஸ் அதனைச் செய்ய மறுப்பது ஏன்? தேர்தலில் 50% இடத்தை முஸ்லிம் சமூகத்துக்கு வழங்க வேண்டும். அதில் அவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் நினைப்பதை அதிகாரப்பூர்வமாக முன்வைக்கட்டும்.
வக்ஃப் வாரியத்தில் ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவிலான நிலங்கள் உள்ளன. இது உரியவர்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்பட்டால், முஸ்லிம் இளைஞர்கள் இன்னும் பஞ்சர் ஒட்டி வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய தேவை ஏற்படாது எனக் குறிப்பிட்டார்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |