பிரிவினைவாதத்தை தூண்டுகிறது தி மு க – நயினார் நாகேந்திரன்

”மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படவில்லை. பிரிவினை வாதத்தை தூண்டுகிறது தி.மு.க.,” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.

மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் வளாகத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ.,யும், தமிழக பா.ஜ., தலைவருமான நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படவில்லை. விருப்ப மொழியை தேர்வு செய்து படிக்கலாம். ஏனென்றால், தெலுங்கு, மலையாளம் பேசுவோரும் தமிழகத்தில் உள்ளனர்.பிரிவினைவாதத்தை தூண்டுகிறது தி.மு.க.,. நாடு வல்லரசு நாடாக வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இல்லை.

அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என அம்பேத்கர் கூறினார். தனித் தமிழ்நாடு வேண்டும் என்று இவர்கள் நினைக்கின்றனர்; மாநிலங்கள் ஒன்றாக இணைந்தால் தான் நாடு வல்லரசாகும். மாநிலத்திற்கு தனியாக முழு அதிகாரம் கொடுக்க முடியாது. மாநில சுயாட்சி கோரிக்கையை ஏற்க முடியாது வெளிநடப்பு செய்துள்ளோம்.

தேர்தல் வரும் நேரத்தில் ஏதோவொரு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். பெண்கள் குறித்து அவதூறாக பொன்முடி பேசி கொண்டு இருக்கிறார். இதனை மீடியாக்கள் பெரியதாக காட்டுவதாக தெரியவில்லை. மற்ற விஷயங்கள் ஏதாவது இருந்தால் அடிக்கடி பிரேக்கிங் செய்தி என திரும்ப திரும்ப போடுகிறார்கள்.

பா.ஜ., சட்டமன்ற தலைவர் மாற்றம் இருக்குமா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”மாற்றம் இருந்தால் சந்தோஷம் தான். ஒரே ஆளே எல்லா பதவிகளையும் வைத்து கொண்டு இருந்தால் என்ன இருக்கிறது” என நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

பொன்முடி பேசியது குறித்து அடிக்கடி போட வேண்டும். நம்ம எல்லோருக்கும் தாய் பெண். பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.