தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம்

பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன், நம் கட்சியின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலுடன், நம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி மக்களுக்கு நல்லாட்சியும் வளர்ச்சியும் கிடைக்கச்செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையும் பொறுப்பும் நம் பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கிறது.

நம் அனைவரின் ஒற்றை இலக்கு மக்கள் விரோத திமுகவின் ஆட்சி அவலங்களை எல்லாம், வரும் தேர்தலில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே; அதற்கு திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்.

ஆகவே நம் அனைவரின் செயல்பாடுகளும் அந்த ஒற்றை இலட்சியத்தை அடைவதற்கு உதவிகரமாக அமைய வேண்டும், கொழுந்துவிட்டு எரியும் உங்களின் ஆர்வமும் துடிப்பும், நம் கட்சியின் வளர்ச்சிக்கு உற்சாகமும் ஊக்கமும் தர வேண்டுமே தவிர உங்கள் ஆர்வம் தவறாக புரிந்துகொள்ளும் வகையில் அமையக்கூடாது.

இனி நாம் செய்ய வேண்டியது திமுகவை தீவிரமாக எதிர்ப்பதும் திமுகவின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதும் மட்டுமே முக்கியமான கடமையாகும். இது தவிர சுவர் விளம்பரங்களிலும், கட்சிக்கான விளம்பரத்தை மேற்கொள்பவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களில் மிகுந்த கட்டுப்பாட்டையும் கவனத்தையும் செலுத்த வேண்டும். நாம் வெளிப்படுத்தும் விளம்பர வாசகங்கள் நம் கட்சியையும், கூட்டணியும் பலப்படுத்த அமைய வேண்டுமே தவிர எந்த தனி நபரையும் காயப்படுத்தக்கூடாது. தேசிய ஜனநாயக் கூட்டணி என்பது நம் பலம் அது குறித்த அனைத்து முடிவுகளையும் தேசியத் தலைமை முடிவு செய்து நமக்கு அறிவிப்பார்கள், கட்சியின் வளர்ச்சியை நோக்கிய நம் பயணத்தில் யாரும் கூட்டணி மற்றும் நம் எதிர்கால ஆட்சி குறித்த கருத்தாக்கங்களை பதிவு செய்யக் கூடாது என்று அன்புடன் வேண்டுகிறேன்.

தாழ்வுற்றுக்கிடக்கும் தமிழகத்தை மீட்பதற்காகவும், தரணியெங்கும் புகழ் வீசும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்ற வெற்றி இலக்குடன் நாம் தொடர்ந்து பாடுபட உறுதி ஏற்போம்.
என்றும் தாயகப் பணியில்

நயினார் நாகேந்திரன்

மாநில தலைவர் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற் ...

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல..” – பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த சிறுமியின் கைவண்ணம் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு சிறுமியின் கையில் இருந்த ஓவியத்தை ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் ம ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெரு ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் பிரதமர் நரேந்திரயின்  மோடி உரை சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்