நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர்

”நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,” என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

துார்தர்ஷன் பொன்விழா கொண்டாட்டம், சென்னையில் நேற்று நடந்தது. துார்தர்ஷனின் நிகழ்ச்சி பிரிவு தலைவர் சீனிவாசன் வரவேற்றார். மத்திய இணை அமைச்சர் முருகன் தலைமை தாங்கினார்.

பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, சீனி விஸ்வநாதன், குருவாயூர் துரை, புரிசை கண்ணப்ப சம்பந்தன், தாமோதரன், ஸ்ரீனிவாஸ், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, வேலு ஆசான் ஆகியோருக்கு கவுரவ பரிசு வழங்கினார்.

மேலும், செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி நிறுவனர் மீனா முத்தையா, பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம், திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, நடன இயக்குநர் கலா, நாட்டுப்புற பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கினார். பின், அமைச்சர் முருகன் பேசியதாவது:

செய்தியின் உண்மை தன்மையை அறிய விரும்புவோர் துார்தர்ஷன் பார்க்கின்றனர். பொதுவாக மக்களிடம் பொய் செய்தி எளிதாக சென்றடையும். மிக வேகமாக, தவறான செய்தி பரவும்.

அதன் தாக்கம் பெரிதாக இருக்கும். ஆனால், துார்தர்ஷன் செய்தி அதிகாரப்பூர்வமானதாக இருக்கும். அதன் உண்மை தன்மையை வெளியில் தேட வேண்டியதில்லை.

துார்தர்ஷன் செய்தியாளரை, தமிழக அரசின் செய்தித்துறை அலுவலர் செய்தி சேகரிக்க வரக்கூடாது என்று கூறியுள்ளார். இவர்கள் கருத்து சுதந்திரம் குறித்து பேசுகின்றனர்.

நேயர்களுக்காக விளக்கம் கேட்டவரை, வரக்கூடாது என்பது ஆணவத்தின் உச்சம். துார்தர்ஷனில் மட்டுமே கருத்து சுதந்திரம் உள்ளது. தமிழகத்தில் தமிழ் தேவை என்பதால், ‘டிடி தமிழ்’ என்று பெயர் மாற்றம் செய்தோம். நாட்டில், 900 ‘டிவி’ சேனல்கள் உள்ளன. இவற்றில் இந்தியாவின் பாரம்பரியத்தை நிலைநாட்டுவது துார்தர்ஷன்.

சுதந்திர தினவிழா, குடியரசு தின விழா நிகழ்ச்சி, ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி நிகழ்ச்சிகளையும், அரசின் திட்டங்களையும் துார்தர்ஷன் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. அரசியல், விளையாட்டு, கலாசாரம், விண்வெளி என, அனைத்து துறைகளின் செய்திகளையும் மக்களிடம் சேர்ப்பது துார்தர்ஷன் தான்.

இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனலாக, துார்தர்ஷன் சேனல் உள்ளது. இந்த சேனல், 50ம் ஆண்டை கொண்டாடுகிறது. இதன் நிறைவு விழாவை, பெரிதாக கொண்டாடுவோம்.

‘வேவ்ஸ் ஓ.டி.டி.,’ தளத்தில், துார்தர்ஷனின் அனைத்து சேனல்களையும் காண முடியும். கிரியேட்டிவ் பொருளாதாரம் எனப்படும், படைப்பு பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

மே 1 முதல், 4 வரை, முதல் முறையாக மும்பையில், ‘வேர்ல்டு ஆடியோ விசுவல் என்டர்டெயின்மென்ட் சம்மிட்’ நடக்க உள்ளது. இதில், பிரதமர் பங்கேற்க உள்ளார்.

இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில், துார்தர்ஷனின் துணை தலைமை இயக்குநர் கிருஷ்ணதாஸ், மண்டல செய்திப் பிரிவு இயக்குநர் குருபாபு பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...