பாகிஸ்தான் நாட்டினரை நாடு கடத்தும் பணி தீவிரம்: அமித்ஷா நடவடிக்கை

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டினரை நாடு கடத்துவதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக என்.ஐ.ஏ., தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் 4 பேரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களை கண்டறியும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இது மட்டுமின்றி, பாகிஸ்தான் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டினர் அனைவரையும் நாடு கடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி., களுடன் அமித்ஷா காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநில முதல்வர்களுடனும் பேசி வருகிறார்.

அந்தந்த மாநிலங்களில் உள்ள பாகிஸ்தான் நாட்டினரையும் அடையாளம் கண்டு, அவர்கள் உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்பி அனுப்புவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார் என என்.ஐ.ஏ., தகவல் தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...