எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் போராளி பிரதமர் மோடி – நடிகர் ரஜினிகாந்த்

‘பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது; மோடி ஜம்மு-காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டுவருவார்,’ என்று நடிகர் ரஜினி கூறினார்.

மும்பையில் இன்று ‘வேவ்ஸ்’ உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் நடிகர்கள் மோகன்லால், ரஜினி, ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ரஜினி பேசியதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது மற்றும் இரக்கமற்றது, பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டுவரும் ஒரு போராளி.

பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துவதால், தேவையற்ற விமர்சனங்கள் காரணமாக அரசு, இந்த நான்கு நாள் நிகழ்வை ஒத்திவைக்கக்கூடும் என்று பலர் கூறினர். ஆனால் பிரதமர் மோடி மீதான எனது நம்பிக்கையின் காரணமாக இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அதன்படியே, இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

பஹல்காம் தாக்குதல் மனிதத்தன்மையற்றது, இது முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் எதிரி. இதை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். பிரதமர் மோடி போராளி, அவர் ஜம்மு-காஷ்மீரில் நிலையான அமைதியை கொண்டுவருவார்.

பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சர்வதேச ஒலி, ஒளி கருத்தரங்கு நடைபெற்றது.

இதில், பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசினார்.

அப்போது அவர்,” பஹல்காம் தாக்குதலால் பொழுதுபோக்கு நிகழ்வான இதில் மோடி பங்கேற்க மாட்டார் என சிலர் கூறினர்.

ஆனால், இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன்.

ஜம்மு- காஷ்மீரில் அமைதியையும், நாட்டிற்கு பெருமையையும் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் கொண்டு வருவார்.

ஏனென்றால், பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப் ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்ச ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...