”இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், பரஸ்பர ஆர்வத்தையும் ஐரோப்பிய நாடுகள் வெளிப்படுத்த வேண்டும்,” எனக்கூறிய நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ”எங்களுக்கு கூட்டாளிகள் தான் தேவை; போதகர்கள் அல்ல,” என, தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம், ஐரோப்பாவிடம் இருந்து இந்தியா எதிர்பார்ப்பது என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
இந்த உலகில் கூட்டாளிகளை தான் நாங்கள் தேடுகிறோம்; போதகர்களை அல்ல. குறிப்பாக, தாங்கள் கூறுவதை உள்நாட்டில் செயல்படுத்தாமல், மற்ற நாடுகளுக்கு போதிப்பவர்கள் எங்களுக்கு தேவையில்லை. ஐரோப்பாவில் சில நாடுகள் இன்னும் அந்த பிரச்னையுடன் போராடி வருகின்றனர். சிலர் மாறிவிட்டனர்.
எங்கள் பார்வையில், நாம் ஒரு கூட்டாண்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், சில புரிதல்கள் இருக்க வேண்டும்; சில உணர்திறன் இருக்க வேண்டும்; பரஸ்பர ஆர்வமும் இருக்க வேண்டும்; உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உணர வேண்டும்.
ரஷ்யாவின் யதார்த்தத்தை இந்தியா எப்போதும் ஆதரித்து வருகிறது.
வளங்களை வழங்குபவர் மற்றும் வளங்களை நுகர்பவர் என்ற முறையில், இரு நாடுகள் இடையே நல்ல புரிதல் உள்ளது.
ரஷ்ய யதார்த்தத்தை நாங்கள் ஆதரிப்பது போல, அமெரிக்க யதார்த்தத்தையும் ஆதரிக்கிறோம். கருத்தியல் வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தாமல், பரஸ்பர நலன்களை கண்டறிவதே அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற சிறந்த வழி.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |