பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை செயலரை அழைத்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

கடந்த ஏப்.,22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வரும் மத்திய அரசு, முதற்கட்டமாக, வான்பரப்பு மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து என முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மேலும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால், எந்த நேரமும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங்குடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது, இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்திய ராணுவத்தினர் அடுத்தடுத்து ராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் வேளையில், பிரதமர் மோடியின் அடுத்தடுத்த இந்த சந்திப்பு பாகிஸ்தானை மேலும் அச்சமடையச் செய்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...