வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம்

நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை மட்டுமே குறி வைத்து, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவம் உள்ளிட்ட முக்கிய கட்டுமான அலுவலகங்களில் தாக்குதல் நடத்தப்படவில்லை.

கடந்த 1999ம் ஆண்டு கார்கில் போரில், இந்தியாவுடன் தோற்ற பின், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் தீவிரம் காட்டியது. பார்லிமென்ட் தாக்குதல், மும்பை, உரி, பதான்கோட் தாக்குதல், கடைசியாக பகல்ஹாம் தாக்குதல் என, 25 ஆண்டுகளில், 350க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் ராணுவத்தினரை பலி வாங்கினர்.

இதற்கெல்லாம் காரணம், ராணுவம், ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன் பாக்., பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல் தான். குறிப்பாக, ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீரில் தொடர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்தின.

இந்த அமைப்பின் தலைவர்களான சையத் சலாஹுதீன், ஹபீஸ் சையது, மசூத் அசார் ஆகியோர், பாக்., மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மசூதிகளில் பதுங்கியிருந்து, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்தனர். காஷ்மீர் இளைஞர்களையும், ‘மூளைச் சலவை’ செய்து தங்கள் அமைப்பில் சேர்த்துக் கொண்டனர்.

அஜ்மல் கசாப்

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் உயிரோடு பிடிக்கப்பட்டான். இவனிடம் இருந்து பெறப்பட்ட தகவலில், மும்பை தாக்குதலுக்கு காரணம், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் தலைவன் ஹபீஸ் சயீது, இப்போதும் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளான். தற்போது, பஹல்காமில் தாக்குதல் நடத்தியுள்ள தி ரெஸிஸ்டன்ட் பிரன்ட் அமைப்பு, லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பு தான்.

‘நம்மை தாக்கியவர்களை மட்டுமே தாக்குவோம்’
பாகிஸ்தானில் முரித்கே தைபா மார்கஸ் எனும் பயங்கரவாத பயிற்சி கூடத்தின் மீது இந்தியா நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஹபீஸ் சயீத்தால் 2000ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வளாகம், பயங்கரவாத அமைப்பின் பயிற்சி மற்றும் கருத்தியல் மையமாக உள்ளது. மும்பை தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோர் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர்.

”எனது குடும்பத்தில் 10 பேர், கூட்டாளிகள் நான்கு பேரை கொன்றுவிட்டார்களே… வருத்தம் இல்லை; விரக்தி இல்லை; அவர்கள் இறக்கவில்லை; தியாகிகள்” என, சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரை கதற வைத்தது இந்தியா. ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் வசிப்பிடமான, பாகிஸ்தான் பகவல்பூரில் நடத்திய தாக்குதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அசாரின் மூத்த சகோதரி, அவரது கணவர், அவரது மருமகன் மற்றும் மனைவி, மற்றொரு மருமகள் என நெருங்கிய சொந்தங்கள் கொல்லப்பட்டனர். பாக்., ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவனது தம்பி அப்துல் ரவுப் அசாரும் நேற்று இறந்துள்ளான்.

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி, அப்பாவி மக்களையும், ராணுவ அதிகாரிகளையும் கொன்று குவித்தவன் மசூத் அசார். இன்று அந்த பயங்கரவாதியின் வீடு புகுந்து யாரும் எதிர்பார்க்காத வகையில், தாக்குதல் நடத்தியது நமது பாதுகாப்பு படை. இது ஒவ்வொரு பயங்கரவாதிக்கும், பாடமாக இருக்கும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...