போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு

‘இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய தயார். மோதலை தணிப்பதற்கு தேவையான வழியை இந்தியா கண்டறிய வேண்டும்’ என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இருநாடுகளும் பரஸ்பரமாக தாக்கி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல்களால் உலக நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளும் தாக்குதலை நிறுத்தி, எல்லையில் அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில், போர் நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலை தணிப்பதற்கு தேவையான வழிகளை இந்தியா கண்டறிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கு இடையே பிரச்னைகளை சரி செய்து, அமைதியை நிலை நாட்டுவதற்கு தேவையான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருடன் தொலைபேசினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான பதற்றமான சூழலை தவிர்க்க தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அதேபோல, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமைச்சர் ஜெய்சங்கர்; அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இன்று காலை தொலைபேசியில் பேசினேன். இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் சரியானதாகவும், பொறுப்புடையதாகவும் தான் இருக்கும். தற்போதும் அப்படித்தான் இருக்கிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...