இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று மாலை பேச்சு நடத்துகின்றனர்.
கடந்த மே 7ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஒன்பது இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள், தலைமையகங்களை இந்திய ராணுவம் குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியது. இதை எதிர்த்து பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் பாகிஸ்தான், ட்ரோன்களை வீசி தாக்கியது.
இந்தியா – பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. நேற்று முன் தினம், மாலை 5:00 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது.
இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே இன்று (மே.12) பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணிக்கு நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை, மாலை 5 மணிக்கு மேல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |