”தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு அதிகாரம் தேவையில்லை” என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் நன்றாக இருக்கிறேன். குடும்பம், ஆடு, மாடுகள் உடன் இருக்கிறேன். இந்த மாதிரி நேரம் கிடைத்தால் கோவிலுக்கு வருகிறேன். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சுற்றும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. கட்சி சொல்லும் பணிகளை செய்கிறேன். தலைவராக இங்கு இருக்க வேண்டும், அங்கு இருக்க வேண்டும் என்பதை தவிர்த்து, என்னுடைய வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதில் பயணத்தை தொடர விரும்புகிறேன்.
மக்கள் பணி செய்கிறேன். வீட்டிற்கு வெளியே மோர் வைத்து கொடுக்கிறேன். தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் குடிக்கிறார்கள். புத்தகம் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்து இருக்கிறது. குழந்தைகளோடு நேரம் செலவிடுகிறேன். ஒரு தொண்டனாக பிரதமர் மோடிக்கு பணி செய்ய வேண்டும். எனது ஆசை பெரிது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று நினைக்க கூடியவன். அதற்கான காலம் வரும். தொண்டனாக பணி செய்து கொண்டு இருக்கிறேன்.
ஓ.பி.எஸ்., பத்திரிகையாளர்கள் சந்திப்பை பார்த்தேன். தலைவர்கள் பதில் சொல்வார்கள். யாரும் பிரிந்து போகவில்லை. எல்லோரும் எங்கள் கூட தான் இருக்கிறார்கள். நமது கூட்டணி வலுவாக இருக்கிறது. நான் இன்று ஒரு தொண்டனாக பணி செய்து கொண்டு இருக்கிறேன். தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு அதிகாரம் தேவையில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |