பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம்

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ஏவுகணையை, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஏவியதும், அதை நமது வான் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400 மூலம் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதும், இப்போது தெரியவந்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா மீது பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர்.

அப்போது, இந்தியாவுக்கு எதிராக என்னென்ன ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது என்ற விவரங்கள், வெளியாகி வருகின்றன.

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் என்ற ஏவுகணையை பாகிஸ்தான் பயன்படுத்தியதை இந்திய இராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த ஷாஹீன் ஏவுகணையை, தரையிலிருந்து ஏவ முடியும். இது மார்ச் மாதம் 2015ல் முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை, பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது ஏவியுள்ளது. ஆனாலும் இந்திய பாதுகாப்பு படையினர், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 400 சுதர்சன சக்கரம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் அதை துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.

இதன் மூலம், பாகிஸ்தான் பெரிதாக நம்பியிருக்கும் ஷாஹீன் ஏவுகணை, இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் எளிதில் சுட்டு வீழ்த்தப்படக் கூடியது என்ற உண்மை அம்பலம் ஆகியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...