மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம்

பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

மே 8 மற்றும் 9 தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் தாக்குதலை இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அனைத்து ஏவுகணைகளையும் அழித்தது.

அப்போது பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவில் மீது பாக். ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்தியது. ஆனால் இந்திய ராணுவம் மிக திறமையாக செயல்பட்டு அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தது.

இதுகுறித்து இந்திய ராணுவ 15வது படை பிரிவு மேஜர் ஜெனரல் கார்த்திக் சேஷாத்ரி கூறியதாவது;

பொற்கோவிலை நோக்கி ஏவப்பட்ட டிரோன்கள், ஏவுகணைகளை இந்திய வான்படை வழிமறித்து தாக்கி அழித்தது. அவர்களிடம் (பாகிஸ்தான்) சரியான இலக்குகளை இல்லை என்பதை கண்டறிந்தோம்.

இருப்பினும், பொற்கோவில் முக்கிய இலக்காக இருக்கலாம் என்று யூகித்து, அதை பாதுகாக்க நவீன வான் பாதுகாப்பு சாதனங்களை தயார்படுத்தினோம். பாக். தாக்குதல்களை முறியடித்து, பொற்கோவிலுககு ஒரு கீறல் கூட விழாமல் பாதுகாத்தோம்.

அதன் பின்னர், பாக். பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ஆகாஷ் ஏவுகணை அமைப்பு எல் 70 வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் உள்ளிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு பொற்கோவிலை பாதுகாத்தது என்பது பற்றிய விரிவான செயல்விளக்க காட்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப் ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்ச ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...