பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு

அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டி உள்ளார்.

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டூராஸ் வெளியுறவு அமைச்சர் எட்வர்டோ என்ரிக் ரெய்னா கார்சியா அரசுமுறைப்பயணமாக கடந்த 15 – 18 வரை டில்லி வந்தார்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள ஹோண்டூராஸ் நாட்டு துாதரகத்தை அவர் திறந்து வைத்தார். நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

இது குறித்து நம் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசியல் ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, மேம்பாட்டு கூட்டாண்மை மற்றும் கலாசார பரிமாற்றங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் முழுமையாக மதிப்பாய்வு செய்தனர்.

சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் துறையில் சாத்தியக்கூறுகள், திறன் மேம்பாடு, எரிசக்தி மற்றும் பேரிடர் மீட்பு உள்ளிட்டவற்றில் உலகளாவிய தெற்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர்.

பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்ப்பதில் ஹோண்டுராஸ் கொண்டுள்ள உறுதியை அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டினார்.

இந்தியா உடனான உறவுகளை ஆழப்படுத்துவதில் ஹோண்டுராஸின் விருப்பத்தை துாதரக திறப்பு பிரதிபலிக்கிறது.

வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, சுகாதாரம், விவசாயம் மற்றும் புதுமை உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு துாதரகம் ஒரு தளமாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...