ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் பங்கை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பாகிஸ்தான் வழக்கம் போலவே தோல்வியை எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. இந்திய மண்ணில் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்த முயன்றது. அவர்கள் பொதுமக்களையும், வழிபாட்டுத் தலங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால் நமது படைகள் பொருத்தமான பதிலடி கொடுத்தன.

குற்றவாளிகளைத் தண்டிக்கும் அதே வேளையில், அப்பாவி உயிர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை நமது பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர்.நமது வீரர்கள் நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்று செயல்பட்டனர். அறுவை சிகிச்சையாளர்கள், நோய் உள்ள பகுதிகளில் துல்லியமாக கருவிகளை பயன்படுத்துவார்கள். நமது பாதுகாப்பு படையினரும் அது போன்று பயன்படுத்தினர். துல்லியமாக பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தினர்.

மே 7ம் தேதி இந்திய ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல பயங்கரவாதிகள் முகாம்கள் தாக்கப்பட்டது. டாக்டர்களும், வீரர்களும் நாட்டிற்கு முக்கியமான வகையில் சேவையாற்றுவார்கள். ஒருவர் சுகாதாரத்தை பாதுகாப்பார். மற்றொருவர் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வார். பாகிஸ்தான் அதன் சொந்த பயங்கரவாதத்தால் அழிந்துவிடும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...