ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்றது. இதில், காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:- உலக சுகாதாரத்தின் தொலைநோக்கு பார்வையை இந்தியா வலுவாக எதிரொலிக்கிறது. உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துகிறோம். இது 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகிறது. ஆயிரக்கணக்கான சுகாதார கட்டமைப்புகள் இந்தியாவில் உள்ளன. எங்களுடைய கட்டணமில்லா தொலை மருத்துவச் சேவை 34 கோடிக்கும் அதிகமான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இந்தியாவின் அணுகுமுறை அளவிடக்கூடிய மற்றும் நிலையான மாதிரிகளை வழங்குகிறது. எங்கள் கற்றல்களையும் சிறந்த நடைமுறைகளையும் உலகத்துடன், குறிப்பாக உலகளாவிய தென்பகுதி நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். உலகிற்கு யோகாவை வழங்கிய நாட்டிலிருந்து, அனைத்து நாடுகளையும் பங்கேற்க அழைக்கிறேன். வேதங்களிலிருந்து ஒரு பிரார்த்தனையுடன் நான் முடிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |