தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் கைதானார். அவர் தி.மு.க., நிர்வாகி அல்ல; தி.மு.க., அனுதாபி என, சட்டசபையில் கூற வேண்டிய நிலை முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டது.
தற்போது ராணிப்பேட்டை, அரக்கோணம் தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வசெயல் மீது, கல்லுாரி மாணவி புகார் அளித்துள்ளார். தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு இரையாக்க முயன்றதாக கூறியுள்ளார். ஒரு அமைச்சர், அவரது உதவியாளர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். தெய்வ செயல் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கை தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க உள்ள நிலையில், விசாரணைக்கு தமிழக போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |