மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்த ஒரு இலக்கையும் எளிதாக எட்ட முடியும்,” என ‘நிடி ஆயோக்’ கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
டில்லி பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் ‘நிடி ஆயோக்’ ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
‘ஆப்பரேஷன் சிந்துார்’ ராணுவ நடவடிக்கைக்கு பின், பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்களும் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:
‘வரும் 2047-ல் வளர்ந்த இந்தியா’ என்பதே ஒவ்வொரு இந்தியரின் குறிக்கோள். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சியடைந்தால், இந்தியா வளர்ச்சியடையும். இதுவே, 140 கோடி இந்தியர்களின் விருப்பம். ஒவ்வொரு மாநகரத்தையும், நகரத்தையும், கிராமத்தையும் வளர்ச்சியடைய செய்வதை, நாம் இலக்காக கொண்டால், 2047 வரை காத்திருக்க வேண்டியதில்லை.
நம் வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்துவது அவசியம். மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றினால், எந்தவொரு இலக்கையும் எளிதாக எட்ட முடியும்.
ஒவ்வொரு மாநிலமும், குறைந்த பட்சம் ஒரு சுற்றுலா தலத்தையாவது, உலக தரத்துக்கு இணையாக, அனைத்து விதமான வசதிகள், உள்கட்டமைப்புடன் உருவாக்க வேண்டும். அது, அருகில் உள்ள நகரங்களையும் சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கு வழி வகுக்கும்.
நம் நாடு, வேகமாக நகரமயமாகி வரும் சூழலில், எதிர்காலத்துக்கு தயாராகும் வகையில் நகரங்களை மேம்படுத்துவது அவசியம். வளர்ச்சி, புதுமை, நிலைப்புத்தன்மை ஆகியவை நகர மேம்பாட்டுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.
மேலும், பணிகளில் பெண்களை பங்குபெறச் செய்யும் வகையில் செயல்பட வேண்டும். அவர்களை கண்ணியத்துடன் ஒருங்கிணைக்கும் வகையில் சட்டங்கள், கொள்கைகளை வகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |