மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய தேதிகளில் சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்குச் செல்லவுள்ளார்.

இரு நாள்களில் நான்கு மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைக்கவுள்ளதால், திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரல்கள் குறித்து காணலாம்.

சிக்கிம்

இரு நாள்கள் பயணமாக சிக்கிம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, சிக்கிம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் காலை 11 மணிக்கு பங்கேற்கிறார்.

அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சிலத் திட்டங்களைத் தொடக்கிவைக்கிறார். நம்சி மாவட்டத்தில், ரூ. 750 கோடி மதிப்பில் 500 படுக்கை கொண்ட மாவட்ட அரசு மருத்துவமனை, சங்கச்சோலிங் பகுதியில் பயணிகள் ரோப் வழி, காங்டாக் மாவட்டத்திலுள்ள சங்கோலா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜபேயி சிலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அடக்கம்.

மேற்கு வங்கம்

இதேநாள் (மே 29) பிற்பாதியில் மேற்கு வங்கத்திற்கு பிரதமர் மோடி பயணிக்கவுள்ளார். அங்கு அலிபுர்தூர் மற்றும் குச் பிகார் மாவட்டங்களில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிகார்

பாட்னா – அர்ராஹ் – சசாரம் பகுதிகளிடையே பல்வேறு சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வாரணாசி – ராஞ்சி – கொல்கத்தா இடையிலான 6 வழிச் சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பாட்னா – கயா – தோபி இடையே நான்கு வழிச் சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சோன் நகர் – முகம்மது கஞ்ச் இடையே ரூ. 1330 கோடி மதிப்பிலான ரயில்வே பாதை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

உத்தரப் பிரதேசம்

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.45 மணிக்கு உத்தரப் பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி, ரூ. 20,900 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடக்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். அங்கு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

கெளதம புத்தா நகரில் யமுனா தொழில் துறை மேம்பாட்டு ஆணையத்தில் 220 கிலோ வாட் துணை மின் நிலைய கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். நொய்டாவில் ரூ. 320 கோடி மதிப்பிலான துணை மின் நிலையத்தை தொடக்கி வைக்கிறார்.

கான்பூரில் ரூ. 8300 கோடி மதிப்பிலான பான்கி அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை தொடக்கி வைக்கிறார். ரூ. 9330 கோடி மதிப்பில் 660 மெகா வாட் திறன் கொண்ட கெளதம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தையும் தொடக்கி வைக்கிறார்.

பின்னர் 2.15 மணிக்கு மேற்கு வங்கத்திலிருந்து பிகாருக்குச் செல்கிறார். அங்கு மாலை 5.45 மணியளவில் பாட்னா விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையக் கட்டடத்தை திறந்து வைக்கிறார். ஒரு கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் ரூ. 1200 கோடி மதிப்பில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பிஹ்தா விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ. 1410 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பாட்னாவிலுள்ள ஐஐடி மற்றும் என்ஐடிக்கு அருகில் பிஹ்தா பகுதி உள்ளதால் கல்வியியல் மையமாகத் திகழ்கிறது.

மே 30 ஆம் தேதி காலை 11 மணியளவில் பிகார் மாநிலம் கராகட் பகுதியில் ரூ. 48,520 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்து அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

ஒளரங்காபாத் மாவட்டத்தில் உள்ள நபிநகர் சூப்பர் அனல் மின் நிலையத்தின் இரண்டாம் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இங்கு 3×800 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறவுள்ளது. இதன்மதிப்பு ரூ. 29,930 கோடி. இது பிகார் மற்றும் கிழக்கு மாநிலங்களின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும். தொழில் துறை வளர்ச்சிக்கும் வித்திடும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வழிவகுக்கும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...