துணிச்சலாக பணியாற்றிய பெண் அதிகாரிக்கு விருது

‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையின் போது, ஜம்மு – காஷ்மீரின் சர்வதேச எல்லையில் துணிச்சலாக பணியாற்றிய பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையின் பெண் அதிகாரி நேஹா பண்டாரிக்கு, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி விருது வழங்கி கவுரவித்தார்.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் அழித்தது.

இதையடுத்து, இந்தியா – பாக்., இடையே எல்லையில் நான்கு நாட்கள் மோதல் நீடித்தது. பாக்., கெஞ்சியதை அடுத்து, சண்டை முடிவுக்கு வந்தது.

ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, ஜம்மு – காஷ்மீரின் ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில், இந்திய எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த நேஹா பண்டாரி என்ற பெண் அதிகாரி பணியில் இருந்தார்.

துணிச்சலாக பணியாற்றிய இவர், சோதனைச்சாவடிக்கு அருகே வீரர்களை வழிநடத்தி அழைத்துச் சென்றார். சவாலான சூழ்நிலையை மிகவும் தைரியத்துடன் எதிர்கொண்ட நேஹா பண்டாரி, பாகிஸ்தானின் சதி திட்டங்களை முறியடித்தார்.

இந்நிலையில், நேஹா பண்டாரியை, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி நேரில் அழைத்து பாராட்டி, விருது வழங்கி கவுரவித்தார்.

உத்தராகண்டைச் சேர்ந்த நேஹா பண்டாரியின் குடும்பம், ராணுவ பாரம்பரியத்தை கொண்டது. அவரது தாத்தா ராணுவத்தில் பணியாற்றிய நிலையில், தந்தை – தாய் ஆகியோர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி உள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.