உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி பாலத்தை இன்று (ஜூன் 06) பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த பாலத்தில் ஏராளமான சிறப்புகள் உள்ளது.
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம், ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு உள்ளது.
* 1,315 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் செனாப் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேலும் இது நில அதிர்வு மற்றும் காற்று சக்திகளைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
* இந்த பாலம் கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து ஜம்மு மற்றும் காஷ்மீரில் இணைப்பை மேம்படுத்தும். இது உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலம் ஆகும்.
* இப்பாலத்தில் கடந்த ஜனவரி மாதம் வந்தே பாரத் விரைவு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் வரையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
* காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவும் குளிர்சியான சூழலுக்கு ஏற்ப, இந்த வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த செனாப் பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |