”கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு சேவை செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 11 ஆண்டுகளில் விசாயிகளுக்காக பா.ஜ., அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அவர்களது வாழ்வில் செழிப்பை உறுதி செய்துள்ளது.
கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு சேவை செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம். விவசாய துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். மண் வளம் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
அவை பெரிதும் விவசாயிகளுக்கு பயன் அளித்துள்ளன. விவசாயிகள் நலனுக்காக வரும் காலத்தில், எங்களது பணி தொடரும். விவசாயிகளின் கண்ணியம் மற்றும் செழிப்புக்காக நாங்கள் பணியாற்றி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |