பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்:

”பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்” என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி: பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு நிதியுதவி அளிக்காமல் தனிமைப்படுத்த வேண்டும்.

பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். பயங்கரவாத உள்கட்டமைப்பின் அடித்தளத்தை அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதால், இந்தியா பாகிஸ்தானுக்கு ராஜதந்திர ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பயங்கரமான பதிலடி கொடுத்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்பதற்காக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நாங்கள் நிறுத்தி வைத்திருக்கிறோம். இந்த முடிவு பாகிஸ்தானுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

பாகிஸ்தானில் உள்ள 80 சதவீத விவசாய நிலங்கள் சிந்து நதி நீர் ஒப்பந்தகளை நம்பியுள்ளது. பயங்கரவாதம் என்பது இந்தியாவின் பிரச்னை மட்டுமல்ல; இது ஒரு உலகளாவிய பிரச்னை. பயங்கரவாதத்தை அகற்ற, நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.