பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்தியா வளர்ச்சியின் அடித்தளம்; பிரதமர் மோடி

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சியமைத்து 11 ஆண்டுகள் நிறைடைந்ததையொட்டி, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புத்தகம் வெளியிடப்பட்டது.

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து புத்தகத்தில் மோடி கூறியிருப்பதாவது; முன்பு பெண்கள் வீடுகளில் முடங்கி கிடந்த காலம் மாறி, நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுப்பவர்களாக உள்ளனர். ‘நாரி ஷக்தி’ எனும் திட்டமானது, நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் அதிகாரம் அளிக்க வழிவகை செய்கிறது. இதன்மூலம், பெண்கள் மதிப்பு, மரியாதை மற்றும் பாதுகாப்புடன் வாழ முடியும்.

இந்திய பெண்கள் பல தடைகளை எதிர்கொண்டனர். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளிட்டவற்றில் பின்தங்கியிருந்தனர். 2014ம் ஆண்டு மோடி பிரதமர் ஆன பிறகு, இவை அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் 67.7% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது ஒரு சமூக மாற்றம் மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கான அத்தியாவசிய தேவை. பெண்கள் சமமாக அதிகாரம் பெற்றால்தான் ஒரு நாடு முன்னேற முடியும்,

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.